முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தூள்.. 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ரூ.10,00...! முதல்வரின் அசத்தல் திட்டம்...

Students can apply for Tamil Nadu Chief Minister Aptitude Test.
05:55 AM Jun 06, 2024 IST | Vignesh
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு . 21.07.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பினை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இத்தேர்வில் 1000 மாணவர்களுக்கு ( நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 -ம் வகுப்புகளில் கணிதம் , அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடைபெறும்.

முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும் . மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 11.06.2024 முதல் 26.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ .50 / - ( ரூபாய் ஐம்பது மட்டும் ) சேர்த்து 26.06.2024 - ற்குள் மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CMO TamilnadumoneyScholarshipschool studentstn government
Advertisement
Next Article