முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களே இப்போ ஹேப்பியா..? வெளியான செம குட் நியூஸ்..!!

01:54 PM Nov 07, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 இந்த மாதம் 10ஆம் தேதி தகுதியானவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.

இத்திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ஆம் தேதியே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை நவ.12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி செலவுகளைச் சமாளிக்கும் வகையில், முன்கூட்டியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் குடும்பத் தலைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 10ஆம் தகுதியானவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
பெண்கள்மகளிர் உரிமைத்தொகைவங்கிக் கணக்கு
Advertisement
Next Article