கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்..!! ஆனால் ஜல்லிக்கட்டில் இறந்த என் மகனுக்கு இரங்கல் கூட தெரிவிக்கல..!! மாடுபிடி வீரரின் தாய் கதறல்..!!
ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 10-வது சுற்றின் போது மதுரை விளாங்குடியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரான நவீன்குமார் களமிறங்கினார். இவர் மாடுபிடிக்க சென்றபோது, காளை குத்தியதில் படுகாயம் அடைந்தார். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நவீன் குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, நவீன் குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், நவீன் குமாரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். நவீன் குமாரின் தாய் மற்றும் சகோதரி இருவரும், "எனது ஒரே மகன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பாதுகாத்து வந்தான். ஜல்லிக்கட்டு விளையாட சென்றதால், இன்று எங்களுடன் இல்லை. என் மகனுக்கு, மாவட்ட ஆட்சியரோ, மாநகராட்சி ஆணையரோ ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கிறது.
ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடி உயிரிழந்தால், அரசு தரப்பில் இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனை தருகிறது. எங்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read More : திருச்சி ஜல்லிக்கட்டில் சோகம்..!! களத்தில் உயிர் பிரிந்த காளை..!! கண்ணீர் விட்ட வீரர்கள், பொதுமக்கள்..!!