For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிறைவுபெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு.. 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்தீபன் முதலிடம்..!! பரிசு என்ன தெரியுமா..?

Balamedu jallikattu is completed.. Natham Partheepan is the first after taming 14 bulls..!!
07:53 PM Jan 15, 2025 IST | Mari Thangam
நிறைவுபெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டு   14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்தீபன் முதலிடம்     பரிசு என்ன தெரியுமா
Advertisement

தமிழ்நாட்டின் மதுரையில் உலகப் புகழ்பெற்ற மூன்று நாள் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் போட்டி நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று பாலமேட்டிலும் சிறப்பாக நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து நாளை ஜனவரி 16-ம்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும்.

Advertisement

இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 930 காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்து விளையாடியது. இப்போட்டியில், மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மது அருந்தியதாகவும், எடை குறைவு உள்ளிட்ட காரணங்களால் 42 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

9 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியில், 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் முதலிடத்தை பிடித்துள்ளார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி என்பவர், 12 காளைகளை அடக்கி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 11 காளைகளை அடக்கி பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் பார்த்தீபனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த துளசிக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. முதல் இடத்தை காளையின் உரிமையாள விஜய் தங்கபாண்டிக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பரிசுப்பொருட்களை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பலர் உடன் இருந்தனர். இது தவிர வெற்றி பெற்ற வீரர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி கிரைண்டர், கட்டில் மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக்காசுகள், அண்டா ,பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Read more ; கொடூரத்தின் உச்சம்!! 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்…

Tags :
Advertisement