ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்..!! கள்ளக்குறிச்சி விவகாரத்தி திடீர் ட்விஸ்ட்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், “கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எதன் அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷசாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Read More : சவுக்கு சங்கர் வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதிகள்..!! என்ன காரணம்..?