For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..? உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

11:45 AM May 10, 2024 IST | Chella
விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம்    உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. நேற்று வழக்கம் போல 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவம் குறித்து அறிந்த திருத்தங்கல், வடமலாபுரம், சோரம்பட்டி, அதிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்தனர்.

Advertisement

இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5.50 லட்சம் நிவாரணம் பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. ஆனால், இந்த தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Read More : JOB | மத்திய அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement