உலகக்கோப்பையை வென்ற குஷியில் தேசியக் கொடியை அவமதித்த ரோகித் சர்மா..!! வெடித்தது புதிய சர்ச்சை..!!
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. 2013-க்குப் பின் கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா உடைத்தது. அப்படி போராடி சரித்திர வெற்றியைப் பெற்றதால் ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் மைதானத்திலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டனர். கேப்டன் ரோஹித் சர்மா தமக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த பார்படாஸ் மண்ணில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நாட்டினார்.
இந்நிலையில், பார்படாஸ் மண்ணில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நாட்டிய புகைப்படத்தை ரோகித் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளார். இந்தியாவுக்காக கோப்பையை வென்ற புகைப்படத்தை கூட பதிவிடாத அவர் தேசியக்கொடியை போராடி நிலை நாட்டியதை பெருமையாக உணர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அதைப் பார்க்கும் ஒருதரப்பு ரசிகர்கள் உங்களுடைய நாட்டுப்பற்று புரிகிறது. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்தலாமா? என்று ரோஹித் சர்மாவுக்கு பதிலளித்து வருகின்றனர்.
ஏனென்றால், இந்திய அரசின் தேசியக் கொடி அவமதிப்பை தடுக்கும் சட்டம் 1971இன் படி. “கொடியை வேண்டுமென்றே தரையோடு தரையாகவோ அல்லது தண்ணீரில் தடம் பிடிப்பதையோ அனுமதிக்கக் கூடாது” என்ற விதிமுறை இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது ரோஹித் சர்மா பார்படாஸ் மண்ணில் கொடியை நாட்டும் போது பிடிப்பு உயரமாக இல்லாததால் அதன் பெரும்பாலான பகுதி தரையில் இருந்தது. எனவே, ரோஹித் சர்மா இந்த புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சொல்லப்போனால் 2018இல் ஒரு ரசிகர் தோனியை சந்திப்பதற்காக களத்திற்குள் தேசிய கொடியுடன் ஓடி வந்தார். அப்போது தன்னுடைய காலில் விழுந்த அந்த ரசிகர் கொடியை கீழே விட்டார். ஆனால், அடுத்த நொடியே கொடியை கீழே விடாமல் தோனி கையிலெடுத்து உயர்த்தினார். எனவே, அறியாமல் பதிவிட்ட அந்த புகைப்படத்தை ரோகித் சர்மா நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Read More : ரூ.14 லட்சம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? முதலீடு எவ்வளவு..? விவரம் உள்ளே..!!