இந்த 5 மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் டிமென்ஷியா ஏற்படலாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
டிமென்ஷியா என்பது தற்போது மிகவும் பொதுவான நோயாக மாறிவிட்டது. 55 மில்லியன் பேருக்கு இந்த பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 மில்லியன் புதிய பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. டிமென்ஷியா லேசானது முதல் கடுமையானது வரை தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு அவரின் தினசரி நடவடிக்கைகளில் முழுமையான உதவி தேவைப்படலாம்.
டிமென்ஷியா என்றால் என்ன? டிமென்ஷியா என்பது ஒரு நரம்பியல் நோயாகும். விஷயங்களை எளிதில் மறந்துவிடுவது, கவலையாக இருப்பது, முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுவது என பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
டிமென்ஷியா என்பது நினைவாற்றல் மற்றும் பகுத்தறிவு போன்ற அறிவாற்றல் திறன்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.
மருந்துகள் டிமென்ஷியாவை ஏற்படுத்துமா? நரம்பு செல்கள் மற்றும் அவற்றின் இணைப்புகள் சரியாக வேலை செய்வதை நிறுத்தும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் டிமென்ஷியா ஏற்படுகிறது. ஒரு நபர் வயதாகும்போது டிமென்ஷியாவின் ஆபத்து அதிகரிக்கிறது.
எனினும் சில மருந்துகள் டிமென்ஷியா அறிகுறிகளை உள்ளடக்கிய எதிர்வினையை ஏற்படுத்தும். சில பொதுவான மருந்துகளை வழக்கமான அடிப்படையில் எடுத்துக் கொண்டால், நோயாளிகளுக்கு டிமென்ஷியாவைத் ஏற்படலாம். டிமென்ஷியாவை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும் 5 பொதுவான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்..
பெனட்ரில் (Benadryl): இந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்வதால் டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து அதிகம். இது ஒரு ஆன்டிகோலினெர்ஜிக் மருந்து, அதாவது இது நரம்பு மண்டலத்தில் செய்திகளை அனுப்பும் மற்றும் கற்றல் மற்றும் நினைவாற்றலில் ஈடுபடும் அசிடைல்கொலின் என்ற வேதிப்பொருளைத் தடுக்கிறது. பெனட்ரில் போன்ற ஆன்டிகோலினெர்ஜிக் மருந்துகளை நீண்டகாலமாக பயன்படுத்துவதால் டிமென்ஷியா பாதிப்பு ஏற்படலாம் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
எனினும் இந்த மருந்துகள் டிமென்ஷியாவை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கவில்லை. நீங்கள் பெனட்ரில்லை எவ்வளவு காலம் மற்றும் எவ்வளவு அடிக்கடி எடுத்துக்கொள்கிறீர்களோ, அவ்வளவுக்கு டிமென்ஷியா உருவாகும் அபாயம் அதிகம். ஒரு வருடத்திற்கு 50 டோஸ்களுக்கு மேல் இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் டிமென்ஷியா அபாயத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஓபியேட்ஸ் (Opiates) நாள்பட்ட வலிக்கு பயன்படுத்தப்படும் ஓபியாய்டு மருந்தின் பயன்பாடு டிமென்ஷியா மற்றும் மோசமான மூளை ஆரோக்கியத்தின் அபாயத்துடன் தொடர்புடையது. ஓபியாய்டு மருந்துகளை பயன்படுத்தாதவர்களை விட, நாள்பட்ட புற்றுநோய் அல்லாத வலியைக் கொண்ட ஓபியாய்டு பயன்படுத்துபவர்கள் அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒமேப்ரஸோல் (Omeprazole) : இந்த மருந்தின் நீண்டகாலப் பயன்பாடு டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. 2023 ஆம் ஆண்டு நரம்பியல் ஆய்வில், குறைந்தபட்சம் நான்கரை வருடங்கள் இந்து மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு டிமென்ஷியா அதிக ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும் இந்த மருந்து டிமென்ஷியா உள்ளவர்களின் மூளையில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் புரதத்தின் அளவை அதிகரிக்கலாம்.
பென்சோடியாசெபைன்கள் (Benzodiazepines): இந்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவது, நினைவாற்றலைப் பாதிக்கின்றன. இதனால் காலப்போக்கில் நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம். பென்சோடியாசெபைன் உட்கொண்டதைத் தொடர்ந்து, குறுகிய கால நினைவாற்றல் பாதிக்கப்படாது, ஆனால் நீண்ட கால நினைவாற்றல் பலவீனமடைகிறது, இது இறுதியில் டிமென்ஷியாவைத் தூண்டும்.
ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ் (Tricyclic antidepressants) : சில ஆய்வுகள் ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ் டிமென்ஷியா அபாயத்துடன் தொடர்புடையவை என்று கண்டறிந்துள்ளன. இந்த மருந்துகளின் நீண்டகால பயன்பாடு டிமென்ஷியா மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், ஒருவர் தனது மருந்து அல்லது மருந்தின் அளவுகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.
Read More : வாக்கிங் உடன் சேர்த்து இதையும் ஃபாலோ பண்ணுங்க.. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்..!