For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் மாறிய டிராபிக் ரூல்ஸ்.. இனி இதுதான் தண்டனை!! வாகன ஓட்டிகளே உஷார்!!

07:09 PM Aug 18, 2024 IST | Mari Thangam
தமிழ்நாட்டில் மாறிய டிராபிக் ரூல்ஸ்   இனி இதுதான் தண்டனை   வாகன ஓட்டிகளே உஷார்
Advertisement

தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூக வலைதளத்தில் நெட்டிசன் எழுப்பிய கேள்விக்கு சென்னை போலீசார் அளித்துள்ள விளக்கம் அளித்துள்ளனர், அதில் தமிழ்நாட்டில் வாகனங்களில் சன் பிலிம் அனுமதிக்கப்படவில்லை. OEM ஆல் பொருத்தப்பட்டபடி, அங்கீகரிக்கப்பட்ட எளிதாக பார்க்க கூடிய tinted glass கண்ணாடி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை சென்னை போலிசார் அறிவித்துள்ளனர்.

அதாவது, 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read more ; பிரேசிலில் X தள அலுவலகத்தை மூடிய எலான் மஸ்க்..!! என்ன காரணம் தெரியுமா?

Tags :
Advertisement