புது கண்டுபிடிப்பு... சென்சார் மூலம் சாலை விபத்தை தடுக்கும் கருவி...! 100 மீட்டர் வரை பயணம்
விபத்து ஏற்படக்கூடிய திருப்பங்களுக்கான சாலை பாதுகாப்பு சென்சாருக்கான அடித்தளத்தை புதுமையான பாலிமர் நானோ கலவை உருவாக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி விபத்துக்கள் நிகழும் அதிக ஆபத்தான திருப்புமுனைகளில் பொருத்தக்கூடிய, சாலை பாதுகாப்பு சென்சாரின் முன்மாதிரி, அழுத்தம் உணர்திறன் மற்றும் ஆற்றல் அறுவடை பண்புகளைக் கொண்ட புதிய பாலிமர் நானோ கலவையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட கால மற்றும் அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் ஆற்றல் அறுவடை, சாதனங்கள் இன்றைய செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும். பாலிமர்கள் மற்றும் நானோ துகள்கள் இன்றைய நெகிழ்வான மின்னணு அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென் பொருள் அறிவியல் மைய (சி.இ.என்.எஸ்), ஆராய்ச்சியாளர்கள், அழுத்தம், உணர்திறன் மற்றும் ஆற்றல் அறுவடை பயன்பாடுகளுக்கான பாலிமர் நானோ கலவையை உருவாக்கி, சாலைப் பாதுகாப்பு சென்சாரின் முன்மாதிரியைக் கண்டுபிடிக்க அதைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த புதிய கலவை முன்மாதிரி நகரும் படிக்கட்டுகளில் பொருத்தப்படலாம் என்பதோடு, மோசமான அபாயகரமான திருப்புமுனைகளுக்கு 100 மீட்டர் முன்பு, சாலையில் அமைக்கப்படலாம். இதனால், எதிர்புறத்தில் இருந்து வரும் எந்த வாகனமும், திரையில் சிக்னலைப் பார்த்து எச்சரிக்கை செய்யப்படும். இது மின்னணு கேஜெட்டுகளை இயக்க சேமிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்கி மேலும் பயன்படுத்த உதவும். புதுமையான பாலிமர் நானோ கலவை மூலம், முன்மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது, இது இடைநிலை உலோக டைசால்கோஜெனைடால் செய்யப்பட்டுள்ளது.
PVDF-VS2 நானோ கலவைகள் நெகிழ்வான, நீண்ட கால ஆற்றல் உருவாக்கம் மற்றும் அழுத்தம் உணர்திறன் பயன்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பை வழங்கும் என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது. இந்த படைப்பு சமீபத்தில் ஜர்னல் ஆஃப் மெட்டீரியல் கெமிஸ்ட்ரி ஏ இல் வெளியிடப்பட்டதுடன் இந்திய காப்புரிமை விண்ணப்பமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.