உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் அபாயம்..!! இன்றே கடைசி நாள்..!! வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை..!
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி வங்கிகள் தனது வாடிக்கையாளரிடம் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆர்பிஐயின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 19ஆம் தேதிக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இதை முடிக்காத பட்சத்தில் வங்கிக் கணக்கு சேவைகள் பாதிக்கப்படலாம் அல்லது கணக்கு முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை தங்கள் கணக்குகளின் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 19ஆம் தேதி கடைசி தேதியாகும். கேஒய்சி அப்டேட் தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு தற்போது கடைசி வாய்ப்பு வந்துள்ளது. இந்த வேலையை முடிக்க இன்றே கடைசி நாளாகும்.
கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் கிளைக்குச் சென்று அவர்களின் ஐடி, முகவரிச் சான்று, புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்று, மொபைல் நம்பர் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது PNB ஆப் அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ தங்களுடைய கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். மார்ச் 19ஆம் தேதிக்குள் உங்கள் கணக்கின் KYC சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கு மூடப்படலாம். இதற்கு பிறகு, கணக்கை ஆக்டிவேட் செய்ய நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும்.
Read More : பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்..!! தனியார் பள்ளியின் மீது பாயும் நடவடிக்கை..!!