For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம்!

07:21 PM Mar 30, 2024 IST | Baskar
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம்
Advertisement

நம்மை அறியாமலே நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

அண்மைக்காலமாக பெரும்பாலன வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தான் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக உணவு பொருட்களை சேமித்து வைக்க பிளாஸ்டிக் பாட்டில்களே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்டைனர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பிஸ்பினால் A (BPA) என்ற கெமிக்கல் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கின்றது. எனவே சமையலறை பொருட்களை சேமித்து வைக்க பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.

அடுத்தது, கேன்களில் அடைத்து வரக்கூடிய உணவுகள் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுத்தும். கேன்களின் ஓரங்களில் அமைந்திருக்கக் கூடிய BPA உணவுகளில் கலப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. இதனால், கேன்களை நாம் சூடேற்றினாலோ அல்லது அவை அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களோடு தொடர்பு கொண்டாலோ BPA நிச்சயமாக உணவுடன் சேர்க்கின்றது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

தற்காலத்தில் அதிகமாகவர்கள் சமைப்பதற்கு பயன்படுத்தும் Non stick  பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்துவதில் பிரதான அங்கம் வகிக்கிறது. நான்ஸ்டிக் கோட்டிங்கை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பெர்ஃபுளோரோஆக்டநோயிக் அமிலமானது (PFOA) புற்று நோயுடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை பாத்திரங்கள் அதிகப்படியாக வெப்பத்தை வெளிப்படுத்துகின்றது. இதில் இருந்து உருவாகும் புகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டுகின்றது.

நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை புற்றுநோய் செல்களின் வளர்க்கியை தூண்டுகின்றது. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இறைச்சிகளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் நமது உடலில் நைட்ரோசமைன்களாக மாற்றமடைகின்றன. அதனால் புற்றுநோய் செல்கள் தூண்டப்படுவதாகவும் இதனை தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் இது புற்நோயை ஏற்படுத்தும் எனவும் தெரியவருகின்றது.

எனவே ஆரோக்கியமாக வாழ, இதுபோன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் புற்றுநோயிலிருந்து தங்களை காத்து கொள்ள முடியும் என்பது தான் இந்த செய்தியின் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஆகும்.

Advertisement