For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிகரிக்கும் தற்கொலைகள்!… மோசடி கடன் செயலிகளின் விளம்பரங்களை வெளியிடக்கூடாது!… மத்திய அரசு அதிரடி!

06:40 AM Dec 28, 2023 IST | 1newsnationuser3
அதிகரிக்கும் தற்கொலைகள் … மோசடி கடன் செயலிகளின் விளம்பரங்களை வெளியிடக்கூடாது … மத்திய அரசு அதிரடி
Advertisement

ஆன்லைன் லோன் செயலிகளில் கடன் பெற்றவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சீனாவை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மோசடி கடன் செயலிகள் மூலமே அதிகளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது, கைப்பேசியில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் தொடர்பு எண்களை திருடி, அவர்களிடம் கடன் பெற்றவர்கள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசுவது, போன்றவற்றில் ஈடுபடுகின்றன. இதனால், இந்தவகை செயலிகளில் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகிறது. இது தவிர, கடன் செயலிகள் என்ற பெயரில் தகவல் திருட்டு, வங்கி விவரங்கள் திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன.

இந்தநிலையில், இதுதொடர்பாக பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திரசேகர், மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஏனெனில், இணையத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது மோசடி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இணையம் என்பது, பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மை வாய்ந்த சேவைகள் மட்டும் கிடைக்கும் இடமாகவும் இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.

Tags :
Advertisement