For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒன்றாக குளிக்க மறுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்..

woman-who-refused-to-bath-with-her-husband-was-beaten-up
05:54 PM Nov 27, 2024 IST | Saranya
ஒன்றாக குளிக்க மறுத்த மனைவி  ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்
Advertisement

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல். இவருக்கு நீமா என்ற மனைவி உள்ளார். கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், திருமணம் ஆன ஆரம்ப நாட்களில், ராகுல் தனது மனைவி நீமா தன்னுடன் ஒன்றாக குளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஆனால் இதற்கு நீமா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல், குடிபோதையில் மொபைல் சார்ஜரை வைத்து நீமாவின் கழுத்தை நெரித்துள்ளார். மேலும், வரதட்சனை கேட்டும் நீமாவை சித்ரவதை செய்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த நீமா, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

ஆனால், சிறிது நாள் கழித்து நீமா தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார். மேலும், நீமா மீன் குழம்பு வைத்த நிலையில், குழம்பில் புளி கரைசல் சரியாக இல்லை என நீமாவை ராகுல் தாக்கியுள்ளார். இதனால் நீமாவின் கண் மற்றும் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், நீமாவை கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், போலீசார் மருத்துவமனைக்கு சென்று நீமாவிடம் விசாரனை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நீமாவின் தந்தை, தனது மகளை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளார்.

Read more: சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?

Tags :
Advertisement