முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எகிறும் விலை!… ஆதார் அட்டையை காட்டினால் போதும்!… புதிய திட்டத்தை அறிவித்த அரசு!

07:38 AM Nov 03, 2023 IST | 1newsnationuser3
Advertisement

உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசை பின்பற்றி பஞ்சாப் மாநிலத்தில் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

உணவு பொருட்களின் விலைவாசியின் ஏற்ற இறக்கத்தால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் தக்காளியின் விலை 100 தாண்டிய உச்ச நிலையில் மக்கள் தக்காளி இன்றி சமைக்க நேரிட்டது. தமிழக அரசோ மலிவு விலைக்கு ஒரு கிலோ தக்காளி என்ற வகையில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வந்தது. இதையடுத்து தக்காளி விலை குறைந்ததை தொடர்ந்து வெங்காயத்தின் விலை தற்பொழுது அதிகரித்து வருகிறது. வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் தற்போது 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்த விலைவாசி உயர்வாக மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை தடுக்க தற்பொழுது பஞ்சாப் அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது காய்கறி மண்டியில் ஆதார் அட்டை கொண்டு வந்து காட்டினால் போதும் அவர்களுக்கு மலிவு விலையில் குறைந்த பட்சமாக ரூபாய் 25 க்கு வெங்காயம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பஞ்சாப் மாநில மக்கள் பெருமளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி மக்கள் பலர் காய்கறி மண்டிக்கு சென்று ஆதார் அட்டையை காட்டி மேற்கொண்டு வெங்காயத்தை வாங்கியும் செல்கின்றனர். தற்பொழுது இந்த திட்டமானது குறிப்பிட்ட சில மண்டிகளில் நடைமுறையில் உள்ள நிலையில் விரைவில் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இதர மாநிலங்களில் காய்கறி வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை உயரும்போது இதே போல திட்டம் கொண்டு வர அதிகம் வாப்புள்ளதாக கூறுப்படுகிறது.

Tags :
ஆதார் அட்டைஎகிறும் விலைதமிழக அரசை பின்பற்றும் பஞ்சாப்புதிய திட்டம்வெங்காயம்
Advertisement
Next Article