முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'AI' தொழில்நுட்பத்தால் அதிகரிக்கும் ஆபத்து.! IT, நிதி துறையில் வேலை இழந்த '82,307' பேர்..!! அச்சமூட்டும் ஆய்வறிக்கை.!

11:12 AM Feb 12, 2024 IST | 1newsnationuser4
Advertisement

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கணினி சார்ந்த அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறைகளில் பணியாற்றும் மனிதர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பதால் ஊழியர்களை நீக்கிவிட்டு இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வளரும் அதே வேளையில் அதிக அளவிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அமெரிக்கா நிறுவனம் நடத்திய ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 136% பேர் லே ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக அந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பத் துறையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் 82,307 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்களை பணியமர்த்தியதில் ஏற்பட்ட குழப்பம் உலகில் நிலவிவரும் பொருளாதார பின்னடைவு மற்றும் வருவாய் இழப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது. எனினும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஊழியர்களின் பணி நீக்கத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அமெரிக்காவின் சேலஞ்சர் கிரே ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்கள் நிதி நிறுவன ஊழியர்கள் அக்கவுண்டன்ட் வழக்கறிஞர்கள் நிதித்துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் ஆகியோரின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2024 இல் 82,307 ஊழியர்கள் அமெரிக்காவில் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 136% அதிகம் என்று அந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. நிதி துறையில் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23,000 ஊழியர்கள் நிதித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் 15,806 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் காரணமாக திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலைகளை ஆட்டோமேஷன் செய்வதால் அந்த வேலைகளுக்கு ஊழியர்களை விட தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே சிறந்தது என நிறுவனங்கள் நம்புவதாக ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக அது போன்ற துறைகளில் அதிக அளவில் பணிநீக்கம் நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
aiartificial intelligenceemployeeEmployee lay offtechnology
Advertisement
Next Article