For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிவியை சுத்தம் செய்யும் போது, இந்த தவறை தப்பி தவறி கூட செஞ்சுராதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க...

right-way-to-clean-your-tv
06:03 AM Jan 07, 2025 IST | Saranya
டிவியை சுத்தம் செய்யும் போது  இந்த தவறை தப்பி தவறி கூட செஞ்சுராதீங்க  அப்புறம் வருத்தப்படுவீங்க
Advertisement

பெரும்பாலும் தற்போது உள்ள வீடுகளில் ஸ்மார்ட் டிவி தான் அதிகம் உள்ளது. சாதாரண டிவியை விட சிறந்த தரத்தில் இருக்கும் இந்த டிவியின் விலை சற்று அதிகம் தான். என்ன தான் ஸ்மார்ட் டிவியாக இருந்தாலும், நாம் சரியாக பராமரிக்கவில்லை என்றால், சாதாரண டிவியை போல் இல்லாமல் பெரிய செலவை இழுத்து வைத்து விடும். இதனால் ஸ்மார்ட் டிவியை கவனமாக கையாள வேண்டும். குறிப்பாக, டிவியை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக டிவியை சுத்தம் செய்வது அவசியம்.

Advertisement

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது சில விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். அந்த வகையில், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதின் மூலம், உங்கள் டிவியில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முடியும். ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது செய்யக் கூடாத சில தவறுகள்: டிவியை சுத்தப்படுத்த விளம்பரங்களின் வரும் ரசாயனங்கள் நிறைந்த லிக்விடை பயன்படுத்த வேண்டாம். டிவி ஸ்க்ரீனில் எந்த இரசாயனங்களும் படக்கூடாது.

எந்த ஒரு கடினமான பிரெஷ் அல்லது ஸ்க்ரப் பயன்படுத்தக் கூடாது. இதனால் திரையில் பிரகாசம் குறைக்கும். சுத்தம் செய்வதாக நினைத்து தண்ணீரை தெளிக்க கூடாது. தண்ணீர் பயன்படுத்தி டிவியை சுத்தம் செய்தால், அது திரையில் ஊடுருவி டிவியை சேதப்படுத்தி விடும். மைக்ரோஃபைபர் துணியை மட்டுமே பயன்படுத்தி டிவியை சுத்தம் செய்ய வேண்டும். கடினமான துணிகளை பயன்படுத்தும் போது, அது திரையில் கீறலை ஏற்படுத்தலாம். நீங்கள் எப்போது டிவியை சுத்தம் செய்தாலும், டிவியின் மின்சார இணைப்பை துண்டித்து, அதோடு அதன் பிளக்கையும் நீக்குவது பாதுகாப்பானது. இதனால் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் அபாயம் இல்லை.

டிவியின் பக்கங்களிலும் போர்ட்களிலும் தேங்கியிருக்கும் தூசியை அகற்ற ஏர் ப்ளோயரைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால், நீங்கள் வெறும் துணியை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். டிவியின் திரையில் உள்ள கரைகளை அகற்ற, செல்போன் அல்லது லேப்டாப் சுத்தம் செய்ய விற்கப்படும் ஸ்கிரீன் கிளீனரை பயன்படுத்தலாம். இல்லையென்றால், மிகவும் லேசான ஈரப்பதம் இருக்கும் துணியை பயன்படுத்தலாம்.

Read more: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 1267 பணியிடங்கள்! கை நிறைய சம்பளம்.. விட்றாதீங்க..!

Tags :
Advertisement