Fake Currency : அதிகமாக புழக்கத்தில் இருக்கும் போலி ரூ.500 நோட்டுகள்.. எப்படி கண்டறிவது..?
தற்போது இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு ரூ.500. முன்னதாக 2,000 நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. இவற்றை மறுபதிப்பு செய்வதையும் நிறுத்தியது. இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது பெரிய நோட்டாக இருக்கும் ரூ.500 மீது மோசடி கும்பல்களின் பார்வை விழுந்தது. போலி நோட்டுகளை தயாரித்து சந்தையில் புலக்கத்தில் விடுகின்றனர்.
இவை ஏறக்குறைய அசல் நோட்டுகள் போலவே இருப்பதால், எது உண்மையானது, எது போலியானது என தெரியாமல் வியாபாரிகள் மற்றும் மக்கள் கவலையடைந்துள்ளனர். போலி நோட்டு அசல் ரூ.500 நோட்டைப் போல் உள்ளது. இதனை கண்டறிவது மிகக் கடினம்.
போலி நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது :
* ரூ.500 நோட்டில் பச்சை நிற பட்டை இருக்கும். அதன் சற்று குறுக்காகப் பார்த்தால், அது நீல நிறத்தில் இருக்கும். அப்படி இருந்தால் அது ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டுகள்.. மாறாமல் பச்சை நிறத்தில் இருந்தால் அது போலியானது.
* ரூ.500 நோட்டின் வலது பக்கத்தில் உள்ள எண்கள் சிறியது முதல் பெரியது வரை இருக்க வேண்டும். இல்லையெனில் அது போலியானது.
* ரூ.500 நோட்டின் இடது புறம் உள்ள பெட்டியில் 500 என்று எழுத வேண்டும். இல்லையெனில் அது போலியானது.
கள்ள நோட்டுகளை தடுக்க, வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். போலி ரூபாய் நோட்டுகள் குறித்து தகவல் தெரிந்தால், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14.4 சதவீதம் போலி நோட்டுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் இருந்தே எவ்வளவு போலியான ரூ.500 நோட்டுகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய போலி நாணயத்தால் சந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இது மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. போலி நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த முடியும்.
Read more ; மெக்காவை புரட்டிப்போட்ட கனமழை!. வெள்ளத்தில் அடித்துச்செல்லும் வாகனங்கள்!. மக்கள் நடமாட தடை விதிப்பு!