முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'ஓய்வு பெற்றவர்களுக்காக தனிக் கிராமம்' மகிழ்ச்சியாக வாழும் மக்கள்!! எங்க இருக்கு தெரியுமா?

Retired people from certain parts of Britain have set up a unique village of their own and are happily living in it.
05:20 PM Jun 27, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரிட்டனில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நபர்கள் அவர்களுக்கென ஒரு தனித்துவமான கிராமத்தை அமைத்து அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

கட்டிடக் கலைஞர் ஆன் தோர்ன் என்பவர் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து 2.5 ஏக்கர் பரப்பளவில் இந்த சுற்றுச்சூழல் கிராமத்தை வடிவமைத்துள்ளார். தனது ஓய்வு பெற்ற நண்பர்களுடன் ஒன்றாக குடும்பமாக இருக்க வேண்டும் என ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார். ஓய்வூதிய பணங்களை இதற்காக செலவழித்து, அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆன் தோர்ன் கூறுகையில், இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து உணவு சமைப்பார்கள். எல்லோரும் ஒன்றாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் ஒருவருக்கொருவர் எந்த பணமும் வாங்காமல் கற்பிக்கிறார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் முழு கிராமமும் ஒன்றாக பங்கேற்று பேசி, உண்டு மகிழ்கிறார்கள். ஒன்றாக உணவை சமைக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக நடனமாடுகிறார்கள் பாடல்கள் கேட்கிறார்கள் என்கிறார் ஆன் தோர்ன்.

‘யாரோ சொன்னது எனக்கு நினைவிருக்கிறது- சரி, நாம் கைகளைப் பிடித்துக் கொண்டு குதிக்க வேண்டும் என்று. ஒரு நாள் அந்த கனவு நனவாகியது. நாங்கள் சமூகத்திலிருந்து பிரிந்து இருக்க விரும்பவில்லை. ஆனால் அந்த வாழ்க்கை முறை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. இங்கு பார்த்தால் எல்லார் முகத்திலும் சிரிப்பு’ என்று ஆன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தேனீ வளர்ப்பதும், மண்பாண்டம் தயாரிப்பதும் இங்குள்ள மக்களின் தொழிலாகும். ஒவ்வொரு நாளும் அதில் புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். இங்கு குடியேறிய ஒவ்வொரு வீடும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. தேவைப்படும்போது ஒன்றுக்கொருவர் துணை நிற்கிறோம் என்றார்.

மேலும், கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் நாங்கள் இந்த கிராமத்தில் குடியேறினோம். வெளி உலகில் எல்லோரும் தனித்தனியாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இங்கே அனைவரும் ஒன்றாக வாழ்ந்தோம். அப்போது புரிந்தது இந்த கிராமத்தின் அற்புதம் என்று ஆன் கூறினார்

Tags :
britainRetired peopleunique village
Advertisement
Next Article