For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சொந்த வீடு வாங்கப் போறீங்களா? கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க!! இல்லைனா சிக்கல்தான்..!!

Proper budgeting is essential to predict how much of the family's income will be left over for monthly expenses. Home is not going to be last in your budget. So plan for the rest after allocating household needs first.
01:29 PM Jun 30, 2024 IST | Mari Thangam
சொந்த வீடு வாங்கப் போறீங்களா  கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க   இல்லைனா சிக்கல்தான்
Advertisement

நமக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக உள்ளது. அந்த கனவை நினைவாக்க பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தின் மாத செலவு போக வருமானத்தில் எவ்வளவு தொகை மீதமிருக்கும் என்பதை கணிக்க, முறையாக பட்ஜெட் போடுவது அவசியம். உங்கள் பட்ஜெட்டில் வீடு கடைசியாக இருக்கப் போவதில்லை. ஆகவே, முதலாவதாக வீட்டிற்கான தேவைகளை ஒதுக்கிய பின் மற்றவைகளுக்கு திட்டமிடுங்கள்.

Advertisement

வீடு அமைந்திருக்கும் இடம்:

வீடு வாங்கும் முன் அது அமைந்துள்ள நிலத்தையும், அதன் சுற்றுப்புறத்தையும் கவனிக்க வேண்டும். விலை மிகவும் அதிகமாக இல்லாத வகையில், நகரின் முக்கிய இடத்தில் இருந்து சற்று தள்ளி ஆனால், இணையான இடத்தில் இருக்குமாறு தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில், வீட்டை விற்பனை செய்ய நேர்ந்தால், அதன் விலையை தீர்மானிப்பதில் அது அமைந்துள்ள இடம் முக்கிய பங்கு வகிக்கும்.

வாடகை அளவு:

வாடகைக்கு வீடு விடும் திட்டத்துடன் வீடு வாங்க முடிவெடுத்தால், அது மக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் வாடகை அதிகம் இருக்கும் பகுதியாக இருப்பது சிறப்பு. குறிப்பிட்ட இடத்தில் வாடகை அளவு எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டால், சரியான வீட்டை வாங்க உதவும்.

நல்ல மறுவிற்பனை மதிப்பு:

வீட்டை வாங்கும்போது அதை விற்பது குறித்து நாம் சிந்திப்பதில்லை. வீடு அமைந்துள்ள இடம் மற்றும் அதன் விலை பற்றி தான் அதிகம் கவனம் செலுத்துகிறோம். தவறான வீட்டை அல்லது இடத்தை தேர்ந்தெடுத்தால், அதை எதிர்காலத்தில் விற்கும் போது அதிக விலைக்கு விற்க முடியாமல் போகலாம்.

கடன் வாங்கும் தகுதி:

நாட்டில் வீடுகள், மனைகள் விலை மிகவும் அதிகம். சம்பாதித்து பணம் சேர்த்து வீடு வாங்குவது மிக மிக கடினம். ஆகவே தான் வீட்டுக் கடன் உதவியை நாடுகிறோம். இணையதளத்தில் சென்று உங்களுக்கு வீட்டுக்கடன் வாங்கும் தகுதி இருக்கிறதா? என்று நீங்கள் ஆன்லைனிலேயே சரிபார்த்து விட முடியும். அதை சரிபார்த்தபின் கட்ட முடியும் என்று, தோன்றும் பட்சத்தில் சரியான முடிவெடுத்து செயல்படலாம்.

பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம்:

வீட்டின் விலையை தவிர, அதை பதிவு செய்வதற்கான கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் ஆகிய செலவுகளும் உண்டு. இந்த கட்டணங்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இத்தொகை கணிசமாக இருக்கும் என்பதால், வீடு வாங்க திட்டமிடும் போது இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஏஜெண்ட்/புரோக்கர்:

நீங்கள் நேரடியாக வீடு வாங்கப் போகிறீர்களா? அல்லது ஏஜெண்ட் மூலம் வாங்கப் போகிறீர்களா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பிளாட்கள் வாங்கவும், விற்கவும் குறிப்பாக மறுவிற்பனை ஆட்கள் விஷயத்தில் உதவிகரமாக ஏஜெண்ட்கள் இருப்பார்கள். ஆனால், இரண்டு தரப்பிலும் இருந்தும் அவர்கள் கமிஷன் வாங்கிக் கொள்வார்கள்.

சொத்து காப்பீடு:

உங்கள் சொத்துக்கு எதிர்பாராமல் ஏதேனும் ஆபத்து சேதம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள சொத்து காப்பீடு உங்களுக்கு உதவும். சொத்து பெயர், சில குறிப்பிட்ட செயல் அல்லது எவ்விதமான சட்ட பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இது காப்பீடு அளிப்பதுடன், இதற்கான கட்டணம் குறைவாக இருக்கும். காப்பீட்டு பாதுகாப்பின் அடிப்படையில் பல்வேறு விதமான இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன.

Read more ; LPG கேஸ் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!!

Tags :
Advertisement