கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம்..!! உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!
காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 16) காலை தொடங்கியது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா அறிவித்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார்கள் என்று அறிவித்தார்.
இதற்கிடையே, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கர்நாடக அரசை கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழை சாதகமாக இருக்கும்போது, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடக அரசின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Read More : தொடர் கனமழை..!! நிரம்பியது பில்லூர் அணை..!! பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!