For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரங்கிமலை சம்பவம் நினைவிருக்கா..? மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு..!!

The CBCID police have completed the interrogation of 70 witnesses. In this situation, the investigation of the case has been concluded and the verdict will be delivered on the 27th.
08:20 AM Dec 25, 2024 IST | Chella
பரங்கிமலை சம்பவம் நினைவிருக்கா    மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு
Advertisement

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவரது மகள் சத்யபிரியா. அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர், சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனால், சத்யாவை அடிக்கடி நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டு கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார். அப்போது அங்கு சதீஷும் வந்திருந்தார். அப்போது, சத்யபிரியாவிடம் சென்று தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா, "என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு" என சொல்லியுள்ளார். ஆனாலும், சதீஷ் விடாமல் திரும்ப திரும்ப கேட்க, சத்யப்பிரியா மறுத்துள்ளார்.

இதனால் சதீஷ் கோபமடைந்தான். அந்த நேரம் பார்த்து ரயில் வந்தது. அப்போது சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதனால், அவர் ரயில் மோதி இறந்துவிட்டார். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி முடித்தது. இந்நிலையில் வழக்கை விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Read More : TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Advertisement