உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கா? அப்போ உடனே இதை செய்யுங்க..
தற்போது உள்ள காலகட்டத்தில், பல பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை பிசிஓடி, பிசிஓஎஸ் தான். வாழ்க்கை முறை மாற்றங்களினால் பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்பு குறைந்து, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரப்பது தான் இதற்க்கு முக்கிய காரணம். இதனால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படும். பொதுவாக, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அது தவறு. இன்னும் சொல்லப் போனால், ஒல்லியாக இருப்பவர்களுக்கு தான் அதிக அளவில் சினைப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகிறது.
பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கும் LUTEINIZING HARMONE அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் போன்றவை சராசரி அளவை விட அதிகமாக சுரந்தால் இந்த பிரச்சனை ஏற்படும். 45 நாட்களுக்கு மேல் மாதவிடாய் இல்லாமல் இருப்பது, ஒரு வருடத்திற்கு 8 முறைக்கும் குறைவாக மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது, முகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் முடி வளர்ச்சி அடைவது, முகப்பரு, இடுப்பு வலி, அதிக அளவு தொப்பை, கழுத்து மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கருந்திட்டுகள், அதிக தலைமுடி உதிர்வு, மன அழுத்தம், சோர்வு ஆகியவை பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனையின் அறிகுறிகள்.
நீங்கள் உணளுக்கு இருக்கும் பிசிஓடி, பிசிஓஎஸ் ஆகியவையை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் உயர் ரத்த அழுத்தம், குறைப்பிரசவம், பக்கவாதம், மலட்டுத்தன்மை, கருப்பை புற்றுநோய், கருச்சிதைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் நீங்கள் இந்த பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கவனித்து சரி செய்து விட வேண்டும். இது போன்ற பிரச்சனைகளை குணமாக்க ஒரு சில மூலிகைகள் பெரிதும் உதவும். ஆம், இந்த பிரச்சனை உங்களுக்கு ஆரம்ப நிலையில் இருந்தால் கழற்ச்சிக்காய் மிகுந்த பயனளிக்கும். கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் மலைவேம்பு உதவியக இருக்கும்.
சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகளை நீர்த்து போகச்செய்ய அசோகமரப்பட்டை உதவும். குழந்தைப்பேறு மட்டும் இல்லாமல், கர்பப்பை சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், செம்பருத்தி பூ தேநீரை தொடர்ந்து குடித்து வாருங்கள். உங்களுக்கு இது போன்ற மூலிகைகள் வாங்க முடியாது என்றால், நீங்கள் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்க்கு பதில், தினமும் காலை வெறும் வயிற்றில் 50 கிராம் அளவு சோற்றுக் கற்றாழையை நன்கு கழுவி விட்டு நீராகாரத்தில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கட்டாயம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
Read more: மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…