கண்ணை சுற்றி கருவளையம் அதிகமா இருக்கா?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!
பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம். முன்பெல்லாம், 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் இருக்கும். ஆனால் தற்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு கூட இந்த பிரச்சனை உள்ளது. கண் கருவளையம் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் ஏற்படும். முகத்தின் மிக மென்மையான பகுதியான கண்களுக்கு கீழ் இருக்கும் சதை, அதிக வேலை கொடுப்பதால் பாதிக்கப்படும். இதனால் தான் கருவளையம் ஏற்படுகிறது. முகம் பளிச்சென்று இருந்து, கண்கள் மட்டும் கருப்பாக இருப்பதால் முகத்தின் அழகே போய்விடும். அப்படி உங்களுக்கும் கருவளையம் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில், இருட்டில் செல்ஃபொன் பயன்படுத்துவது, டீவியின் அருகில் அமர்ந்து பார்ப்பது, இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது போன்ற பழக்கங்களை விட்டு விடுங்கள். பின்பு ஏற்கனவே இருக்கும் கருவளையத்தை போக்க, உருளைக்கிழங்கை பயன்படுத்துங்கள். இதற்க்கு, உருளைக்கிழங்கை தோல் உரித்து சுத்தம் செய்யுங்கள். பின்பு அதை மிக்ஸியில் நன்கு அரைத்து, கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவி, சிறிது நேரம் காயவைத்து கழுவுங்கள். இப்படி செய்வதால் உங்கள் கருவளையம் சீக்கிரம் மறைந்து விடும்.
விளக்கெண்ணெய் சருமத்தில் வறட்சியை போக்க உதவும். வைட்டமின் இ அதிகம் நிறைந்த இந்த எண்ணெய்யில் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின்பு அதில், ஒரு டீஸ்பூன் காபி தூளை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இந்த கலவை கிரீம் பதத்திற்கு வர வேண்டும். இதற்க்கு நீங்கள் அகன்ற பாத்திரத்தில் சுடுதண்ணீரை கொதிக்க வைத்து அந்த நீருக்குள் இந்த கலவை இருக்கும் பெளலை வைத்து கலக்கி கொண்டே இருந்தால் க்ரீம் பதத்துக்கு தயாராகும். இப்போது இந்த கிரீமை, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு கீழ் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் வாழைப்பழத்தை வைத்தும் கருவளையத்தை போக்கலாம். இதற்க்கு நீங்கள் வாழைப் பழத்தோலை தூக்கி எறியாமல் அந்த தோலை, கண்களை மூடி கண்களுக்கு மேலும் கீழும் மெதுவாக வட்டவடிவில் மசாஜ் செய்ய வேண்டும். பத்துநிமிடம் இப்படி தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Read more: பேக்கேஜ்டு வாட்டர் அதிக ஆபத்துள்ள உணவு வகையில் சேர்ப்பு..!! – FSSAI உத்தரவு