சிறுநீரக கற்கள் பாதிப்பு உள்ளதா.? இந்த எளிய முறையை ட்ரை பண்ணி பாருங்க.!?
பொதுவாக சிறுநீரக கற்கள் என்பது நம் உடலில் உள்ள நச்சுக்களும், நாம் உண்ணும் உணவுகளில் உள்ள நச்சுக்களும் சிறுநீரின் வழியாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்குவது தான் சிறுநீரக கற்களாக மாறுகிறது. சிறுநீரக கற்கள் வந்துவிட்டால் இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் நம்மால் தாங்கவே முடியாத அளவிற்கு வலி ஏற்படும். குறிப்பாக ஒரு முறை சிறுநீரக கற்கள் வந்து குணமானாலும் மீண்டும் மீண்டும் சிறுநீரக கற்கள் வரும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
மிகவும் சிறிய அளவில் உள்ள சிறுநீரக கற்களை உணவு முறையின் மூலமே சரி செய்ய இயலும். ஆனால் சிறுநீரக கற்கள் பெரிய அளவில் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இவ்வாறு சிறிய அளவில் உள்ள சிறுநீரக கற்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு கறைக்கலாம் என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
1. நெருஞ்சி முள் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி தினமும் தண்ணீருக்கு பதிலாக இதை குடித்து வரவும். இவ்வாறு செய்வதன் மூலம் இரண்டு நாட்களில் சிறுநீரக கற்கள் சிறுநீரின் வழியே வெளியேறும்.
2. ஒரு பெரிய பக்கெட்டில் பாதி அளவு ஐஸ் கட்டிகளை போட்டு வைத்து தண்ணீர் முழுவதுமாக ஊற்றிக் கொள்ளவும். பின்பு இந்த ஐஸ்கட்டியில் காலை வைத்து பத்து நிமிடங்களுக்கு இருந்து வந்தால் சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும். இவ்வாறு எளிய வழிமுறைகளின் மூலமே சிறுநீரக கற்களை நீக்கலாம்.