நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் பாதிப்புகளை சில நிமிடங்களிலேயே குணமாக்கும் வெண்பூசணி சூப்.!?
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் துரித உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது. இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பல வகையான நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பலருக்கும் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதற்கு வெண் பூசணியை சூப் வைத்து தினமும் குடித்தால் வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி நெஞ்செரிச்சல் பிரச்சனை சில நிமிடங்களிலேயே சரியாகிவிடும். இந்த வெண்பூசணி சூப் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி தழை - சிறிதளவு,பால் - ஒரு டம்ளர், மிளகுத்தூள் – 1/2டீஸ்பூன், சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 4, உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்பு பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். பூசணிக்காய் நன்றாக வெந்த பின்பு இதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையில் பால், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான வெண்பூசணி சூப் தயார்.