80 வயதிலும் ஸ்ட்ராங்கான பற்கள் வேண்டுமா.! இதை பண்ணுங்க போதும்.!?
"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்" என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் அழகான சிரிப்பிற்கு அடையாளமாக இருப்பது நம் பற்கள்தான். அந்த பற்களை தினமும் தூய்மையாக பேணுவது நம் அன்றாட கடமையாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கி சுத்தம் செய்வது பல நன்மைகளை தரும்.
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் அனைவருக்கும் சொத்தைப்பல் ஏற்படுகிறது. பற்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லித் தருவது பெரியவர்களின் கடமையாகும். மேலும் ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் 80 வயதிலும் பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள முடியும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
சாதாரணமாக பல் துலக்கி முடித்த பின்பு கொய்யா இலையை வாயில் போட்டு மென்று வருவது பல் மற்றும் ஈறுகளில் உள்ள புழுக்களை அளித்து பற்களை பாதுகாக்க உதவுகிறது. மேலும் பல் சொத்தை, ஈறுகளில் ரத்தம் கசிவு, பல் வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கொய்யா இலையை காய வைத்து பொடி செய்து ஜாதிக்காய் பொடியுடன் சேர்த்து பல் துலக்கி வர விரைவில் பலன் பெறலாம்.
மேலும் பற்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கால்சியம் என்பதால் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களான பால், முட்டை போன்றவற்றை அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டால் பல் மிகவும் வலிமையாக இருக்கும். இவ்வாறு ஒரு சில உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பற்கள் வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் இருந்து வரும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.