For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மூல நோய் ஒரே வாரத்தில் குணமாக வாழைப்பழத்துடன் இதை கலந்து சாப்பிட்டு பாருங்கள்.!?

06:30 PM Feb 23, 2024 IST | 1newsnationuser5
மூல நோய் ஒரே வாரத்தில் குணமாக வாழைப்பழத்துடன் இதை கலந்து சாப்பிட்டு பாருங்கள்
Advertisement

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழலினாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினாலும் பலரும் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மூலம் நோய் மிகப்பெரும் பாதிப்பாக இருந்து வருகிறது. இந்த நோயை குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் மீண்டும் மூல நோய் உடலில் ஏற்படுகிறது. இவ்வாறு மீண்டும் வராமல் இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

Advertisement

மேலும் உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம், மூல கடுப்பு போன்ற அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகுவதற்கு உணவு கட்டுப்பாட்டுடன் இந்த வீட்டு வைத்திய முறையை செய்து பாருங்கள். தினமும் இந்த வீட்டு வைத்திய முறையை செய்து சாப்பிடுவதன் மூலம் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் குணமடையும் என்று சித்த மருத்துவர்கள் கூறியுள்ளன.

முதலில் ஒரு படிகார கல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு சிறிய துண்டு மட்டும் வெட்டி எடுத்து தோசை கல்லில் வைத்து விட வேண்டும். தோசை கல்லில் சூட்டில் வைக்கும் போது படிகார கல் உருகி உள்ளே இருக்கும் நீர்மத்தன்மை கொதித்து பொங்கி வரும். இவ்வாறு முழுவதுமாக கரைந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும். பின்பு தோசை கல்லில் உள்ள படிகார கலவையை எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாழைப்பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி படிகார பொடியை ஒரு சிட்டிகை அளவு வாழைப்பழத்தின் மீது தூவி நன்றாக தேன் ஊற்றி தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலுமாக குணமடையும். மேலும் இதை 11 முதல் 15 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். படிகார பொடியை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary : Eating banana mixed with alum honey will cure hemorrhoids within a week

Read more : இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து.!?

Advertisement