பேன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா..! உடனடியாக நீங்க இதை செய்து பாருங்கள்.!
பொதுவாக நம் தலையில் அழுக்கு, பொடுகு இருந்தால் பேன் தானாகவே வந்துவிடும். மனிதர்கள் மூலம் ஒருவருக்கொருவர் பரவும் ஒரு ஒட்டுண்ணி தான் பேன். ஒருவர் தலையில் பேன் இருக்கும்போது அவரின் அருகில் ஒருவர் படுத்து உறங்கினாலோ அல்லது அவர் பயன்படுத்திய துண்டு, சீப்பு போன்றவற்றை பயன்படுத்தினாலோ மற்றவர் தலையிலும் பேன் பரவி விடும்.
குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் அருகருகே அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் தினமும் ஈர தலையுடன் நீண்ட நேரம் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு எளிதில் பேன் தொல்லை வந்துவிடும். தலையில் பேன், ஈர் போன்ற தொல்லை அதிகரித்து அளவுக்கு அதிகமான அரிப்பு ஏற்படும். இந்த பேன் தொல்லையை சில நாட்களிலேயே எப்படி சரி செய்யலாம் எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்.
1. அரைத்த செம்பருத்தி பூ, பொடியாக நுணுக்கிய கற்பூரம், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து குளிப்பதற்கு முன்பு தினமும் தலையில் தேய்த்து வர வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்திலேயே பேன் தொல்லை நீங்கும்.
2. துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து காய வைத்து குளித்து வர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.
3. கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து இரவு தூங்குவதற்கு முன்பாக தலையில் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் இரண்டு நாட்களிலேயே பேன் தொல்லை நீங்கும்.
4. மரிக்கொழுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு கப் எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து குளிப்பதற்கு முன் தலையில் தேய்த்து வந்தால் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கி தலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.