சளி இருமலை ஒரே வாரத்தில் குணப்படுத்தும் ஆடாதோடை இலைகள்.! எப்படி பயன்படுத்தலாம்.!
பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று கிருமிகளால் ஏற்படும் நோய் பாதிப்புகள் பலருக்கும் ஏற்படுவது சாதாரணமானது. ஆனால் ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அடிக்கடி இந்த பிரச்சனைகள் ஏற்படும். இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்து அடிக்கடி நோய் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் ஆடாதோடை இலையை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆடு தொடாத இலை என்ற பெயர் தான் மருவி ஆடாதோடை இலை என்று மாறிவிட்டது. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் ஆடாதோடை இலையை தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பின்னர் தண்ணீரை வடிகட்டி தேன் கலந்து குடித்துவர இப்பிரச்சனை விரைவில் குணமாகும்.
ஆடாதோடை இலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து குடித்து வர சீதபேதி, இரத்த பேதி, மூலம் போன்ற நோய்களை குணப்படுத்தும். மேலும் உடல் வலி, தலைவலி, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆடாதோடை இலையை நீராவியில் வேகவைத்து சாப்பிட்டு வர சரியாகும். மேலும் சளி, இருமல், காய்ச்சல், மூச்சு விட சிரமப்படுதல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் ஆடாதொடை இலைகள், துளசி, கற்பூரவள்ளி இலை மூன்றையும் கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் உடனடியாக சரியாகும்.