For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆஸ்துமா, மார்பு சளி, மூச்சுவிட சிரமம் போன்றவைகளுக்கு எருக்கன் செடி இலையை இப்படி பயன்படுத்தி பாருங்க.!

06:44 PM Feb 13, 2024 IST | 1newsnationuser5
ஆஸ்துமா  மார்பு சளி  மூச்சுவிட சிரமம் போன்றவைகளுக்கு எருக்கன் செடி இலையை இப்படி பயன்படுத்தி பாருங்க
Advertisement

பொதுவாக ஒரு செடியில் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே நோய்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டிருந்தால் அந்த செடி மருத்துவ குணங்கள் மிகுந்ததாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளை எருக்கன் செடியின் பூ, இலை, வேர் என அனைத்துமே நோய்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டிருக்கிறது.

Advertisement

எருக்கன் செடியில் தண்டை உடைத்து பார்த்தால் அதிலிருந்து வெள்ளை நிற பால் வடியும். முள் குத்தினாலோ அல்லது ஏதாவது காலில் குத்தி நீர் கோர்த்தாலோ, இந்த பாலை அதில் வைத்தால் முள் குத்திய வலியும் சரியாகும். நீர் கோர்த்த கட்டியும் உடைந்து கெட்ட நீர் வெளியே வரும்.

ஆஸ்துமா, மார்புச் சளி, சுவாசக் குழாயில் பிரச்சனை, மூச்சு விட சிரமம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த எருக்கன் செடியின் இலைகளை பறித்து நெருப்பில் போட்டு அந்த புகையை சுவாசித்து வந்தால் நோய் விரைவாக குணமடையும். சூடு கட்டிகள் மற்றும் கொழுப்பு கட்டிகள் உடலில் வரும்போது இந்த இலையை அரைத்து சாறு எடுத்து கட்டிகள் தடவி வந்தால் கட்டி உடைந்து வலி குறையும்.

எருக்கன் இலைகளின் சாறு எடுத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை வலி ஏற்படும் போது கொடுத்து வந்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான படை, சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு எருக்கன் இலையை சாறு எடுத்து மஞ்சள் தூள் இரண்டையும் கடுகு எண்ணெயில் காய்ச்சி தடவி வந்தால் தோல் பிரச்சனை சரியாகும்.

வசம்பு, பெருங்காயம், லவங்கம், பூண்டு மற்றும் எருக்கன் இலையின் சாறு 5 கிராம் அளவிற்கு எடுத்து காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறு பாம்பு மற்றும் எலி கடிக்கு மருந்தாக பயன்பட்டு விஷம் முறிவை ஏற்படுத்துகிறது. மேலும் காதில் வலி மற்றும் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த சாறு உபயோகப்படும்.

Tags :
Advertisement