For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’மதம் மாறி காதல் திருமணம்’..!! ’தினமும் டார்ச்சர்’..!! ’என்னால முடியல’..!! ஓபனாக பேசிய நடிகை ஷபானா..!!

04:27 PM Dec 19, 2023 IST | 1newsnationuser6
’மதம் மாறி காதல் திருமணம்’     ’தினமும் டார்ச்சர்’     ’என்னால முடியல’     ஓபனாக பேசிய நடிகை ஷபானா
Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷபானா. இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகர் ஆர்யனுக்கும் காதல் திருமணம் நடந்தது. ஷபானா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். ஆர்யன் இந்து மதம். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில், இதுகுறித்துத் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் ஷபானா.

Advertisement

அவர் கூறுகையில், “நான் ’செம்பருத்தி’ சீரியலில் நடிக்கும் போது பொட்டு வைத்துக் கொண்டு நடித்தேன். நான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், இதற்கு என் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இந்த காரணத்திற்காக ஓராண்டுக்கு மேல் என்னிடம் பேசாமல் இருந்தனர். அதுமட்டுமின்றி, என் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து இந்து பையனை எந்த காரணத்திற்காகவும் திருமணம் செய்யக்கூடாது என்று தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை பேசி என்னை டார்ச்சர் செய்தார்கள்.

ஆனால், என் ஆழ்மனதில் ஒரு இந்து பையனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பதிந்து விட்டது. இதற்காகத்தான் நான் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்” என்று அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Tags :
Advertisement