முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை..? விரைவில் அறிவிப்பு..!!

05:20 PM Dec 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னைக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூ. 6000-க்கு இணையாக தென் மாவட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவர்களுக்கான ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்

இந்நிலையில், தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஆகையால், சென்னைக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6,000-க்கு இணையாக தென் மாவட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
தூத்துக்குடிநிவாரணத் தொகைநெல்லைமுதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Next Article