For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜியோ வழங்கும் அட்டகாச ரீசார்ஜ் பிளான்..!! எக்கச்சக்க ஆஃபர்.. 5 நாள் தான் டைம்.. மிஸ் பண்ணிடாதீங்க!!

Reliance Jio is celebrating its 8th anniversary with various offers.
07:18 PM Sep 05, 2024 IST | Mari Thangam
ஜியோ வழங்கும் அட்டகாச ரீசார்ஜ் பிளான்     எக்கச்சக்க ஆஃபர்   5 நாள் தான் டைம்   மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

ரிலையன்ஸ் ஜியோ அதன் 8-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைளை வழங்கி உள்ளது. ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டா வசதி, அஜியோ, சொமேட்டோ ஆஃபர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜியோ ரூ.175 விலையில் புதிய ஓ.டி.டி பேக் அறிமுகம் செய்துள்ளது. இதில் 10  ஓ.டி.டி தளங்களுக்கான அணுகல் மற்றும் 10 ஜிபி டேட்டா வவுச்சர் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Advertisement

கூடுதலாக, ஜியோ அஜியோவுடன் இணைந்து ரூ. 2,999 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ. 500 தள்ளுபடியை வழங்குகிறது. மேலும் உணவுப் பிரியர்களுக்காக குறிப்பிட்ட சில திட்டங்களில் ஜியோ பயனர்கள் 3 மாத Zomato கோல்ட் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெறுவார்கள்.

ஜியோ ரூ 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இப்போது, கூடுதலாக 20 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ல் கால்கள் (Unlimited Voice Calls), 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது.

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 98 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை இந்த திட்டத்திலும் கிடைக்கிறது.

ஜியோ ரூ 3599 திட்ட விவரங்கள் (Jio Rs 3599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக மேற்கூறிய ஆண்டு விழா சலுகைகள் கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?

Tags :
Advertisement