முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இத்தனை பேருடன் ரிலேஷன்ஷிப்பா’..? நடிகை அனுயா சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

11:49 AM Dec 09, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஜீவா - எம்.ராஜேஷ் கூட்டணியில் வெளியான "சிவா மனசுல சக்தி" படத்தின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகை அனுயா. முதல் படத்திலேயே நடிப்பில் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்த அவர், பல முக்கிய நாளிதழ்களின் பாராட்டுகளை பெற்றார். முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அனுயா, மதுரை சம்பவம், நகரம் போன்ற குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார்.

Advertisement

சிறிது காலம் படங்களில் தோன்றாத அவர் விஜய்யின் "நண்பன்" படத்தில் இலியானாவின் அக்காவாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ஒரு சில சொற்ப படங்களில் நடித்து விட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகினார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த அனுயா, முதல் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் அனுயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னை குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அந்த வீடியோவில், "நான் துபாயில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு தமிழ் கொஞ்சமாக தான் தெரியும். என்னுடைய அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள். என்னுடைய அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார்.

நான் புனேவில் பொறியியல் பட்டம் பெற்றேன். பிறகு சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். நான் விஜய் ஆண்டனி, ஜீவா, சுந்தர்.சி, ஹரிகுமார் உள்ளிட்டோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறேன் என எழும் வதந்திகள் அனைத்தும் உண்மையல்ல. நான் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னிடம் கேட்க ஏதாவது கேள்விகள் இருந்தால் நீங்கள் என்னிடம் கேட்கலாம்" என பேசி இருந்தார்.

Tags :
சிவா மனசுல சக்திநடிகை அனுயா
Advertisement
Next Article