முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடு முழுவதும் ஆதரவற்ற திருநங்கைகளுக்கு பாதுகாப்பு இல்லங்கள் மூலம் மறுவாழ்வு...! மத்திய அரசு தகவல்

Rehabilitation through shelter homes for destitute transgender women across the country
06:10 AM Dec 18, 2024 IST | Vignesh
Advertisement

திருநங்கைகளின் மறுவாழ்வுக்கான மத்திய அரசின் திட்டம்' என்ற துணைத் திட்டத்துடன் செயல்படுத்தி வருகிறது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் பிற வகையைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 4.87 லட்சமாக உள்ளது. இந்தப் பிரிவின் கீழ், 'திருநங்கைகள்' மட்டுமின்றி பாலின அடிப்படையில் பிற பிரிவினரும் பதிவு செய்து கொள்ள முடியும். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை விளிம்புநிலை மக்களின் நலனுக்கான திட்டங்களுடன் 'திருநங்கைகளின் மறுவாழ்வுக்கான மத்திய அரசின் திட்டம்' என்ற துணைத் திட்டத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், ஆற்றுப்படுத்துதல், திறன் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Advertisement

கடந்த மூன்றாண்டுகளில், 990 ஆதரவற்ற திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லங்கள் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டு, 725 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் மூலம் 24,015 பேருக்கு அடையாளச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் திருநங்கைகள் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகளின் பாதுகாப்புக்காக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் திருநங்கைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநங்கைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை கண்காணித்தல், சரியான நேரத்தில் பதிவு செய்தல், புலனாய்வு செய்தல், வழக்கு விசாரணையை உறுதி செய்யவும் காவல்துறை தலைமை இயக்குநரின் கீழ் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் 12 திருநங்கைகள் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
central govtRehabilitation centretransgenderமத்திய அரசு
Advertisement
Next Article