ரெட் அலர்ட் வார்னிங்!. இன்று 14 மாவட்டங்களில் விடுமுறை?. முழு லிஸ்ட் இதோ!.
Holiday: அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று (16.10.24) 14 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அந்த பகுதியில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதைத்தொடர்ந்து வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகன மழை பெய்யும் என கூறப்பட்டு இருந்த நிலையில், அதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Readmore: ரத்தன் டாடா நினைவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாம்பே ஹவுஸ் உணவகம்..!!