தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!
தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (வியாழக்கிழமை) முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read More : மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!! எந்த தேதியில் தெரியுமா..?