For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வங்க கடல் பகுதியில் இந்த வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி...! வானிலை மையம் எச்சரிக்கை

A low pressure area will develop over the Bay of Bengal this weekend
05:42 AM Nov 01, 2024 IST | Vignesh
வங்க கடல் பகுதியில் இந்த வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி     வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

நவம்பர் முதல் வாரத்திலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறவும் வாய்ப்புள்ளது. தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் பட்சத்தில் அது நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement