இன்று இந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்..!! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிசம்பர் 2) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில்கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் டிசம்பர் 3ஆம் தேதி சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை...
அரபிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இன்றும், நாளையும் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.