முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னைக்கு ரெட் அலர்ட்..!! அதி கனமழை கொட்டித் தீர்க்கப் போகுது..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

A red alert for extremely heavy rain has been issued for 7 districts including Chennai, Kanchipuram, and Tiruvallur on November 30th.
02:11 PM Nov 28, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை ஒட்டியப்படி, தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகா்ந்து வருகிறது.

இது புதன்கிழமை புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெல்ல 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால், இன்று (நவ.28) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளைய தினம் (நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 30ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Read More : கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

Tags :
ChennaiHeavy rainசென்னைமிக கனமழை
Advertisement
Next Article