மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது...! தமிழக அரசு வைத்த செக்...
மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசு மூலம் பிற உதவித்தொகை பெறுவோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை.
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200/-. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ரூ.600/-), 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ.750/-) மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600/- (மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை ரூ.1000/-) வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித்தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொறுத்த வரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்.) பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். MBC/BCM/OBC/OC பிரிவினர் 40 வயதிற்குட்பட்டவராகவும், SC/SCA/ST பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை)
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை). ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது. தினசரி மாணவராக கல்வி பயின்று வருவோருக்கு (Regular Student) உதவித்தொகை பெற தகுதியில்லை. மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசு மூலம் பிற உதவித்தொகை பெறுவோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை.