For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொஞ்சம் வித்தியாசமாக இந்த கிரீன் சிக்கன் பிரை செய்து பாருங்க.! உடனே காலியகிடும்.!?

07:35 AM Feb 04, 2024 IST | 1newsnationuser5
கொஞ்சம் வித்தியாசமாக இந்த கிரீன் சிக்கன் பிரை செய்து பாருங்க   உடனே காலியகிடும்
Advertisement

ஞாயிற்றுக்கிழமை அன்று பலரது வீடுகளிலும் அசைவ உணவுகளை சமைப்போம். ஒரே மாதிரி சுவையில் அசைவம் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இந்த கிரீன் சிக்கன் ப்ரை செய்து கொடுங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement

தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ, புதினா - 1கப், கொத்தமல்லி இலை - 1/2 கப், பெருஞ்சீரகம் - 1டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன், மல்லி பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி இலை, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய் போன்றவற்றை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட், மல்லி பொடி, உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து விடவும். இதை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம் போட்டு தாளித்து மசாலா கலந்து வைத்த சிக்கனை போட வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. சிக்கனிலிருந்து வெளிவரும் தண்ணீர் நன்றாக வற்றி சிக்கன் வெந்ததும் மீதமுள்ள கொத்தமல்லி தலைகளை மேலே தூவி இறக்கினால் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கிரீன் சிக்கன் ப்ரை தயார்.

Tags :
Advertisement