முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கேரட் சாதம் இப்படி செய்து கொடுங்க.! உடனே காலியாகிடும்.!

07:58 AM Feb 03, 2024 IST | 1newsnationuser5
Advertisement

கேரட்டில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு கேரட்டை பொறியலாகவோ, கூட்டாகவோ செய்து கொடுத்தால் சாப்பிட மறுக்கின்றனர். இதனால் ஊட்டசத்து குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. எனவே கேரட் சாதமாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இப்படி செய்து கொடுத்து பாருங்க.

Advertisement

தேவையான பொருட்கள்: கேரட் 1/4 கிலோ, பாஸ்மதி அரிசி அரை கிலோ, பட்டை, கிராம்பு, ஏலக்காய் -2, புதினா, மல்லித்தழை, கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, பாதாம் முந்திரி - 4, காய்ந்த மிளகாய் -3, நெய் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போன்றவற்றை வறுத்தெடுத்து தனியாக அரைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கேரட்டை மிக்ஸியில் நன்றாக அரைத்து ஜூஸாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு குக்கரில் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து ஊற வைத்து அரிசியை போட்டு நெய்யில் கிளறி விட வேண்டும்.

கேரட் ஜூஸை குக்கரில் அரிசி மூழ்கும் அளவிற்கு ஊற்ற வேண்டும். பின்பு உப்பு சேர்த்து அரைத்து வைத்த பொடியை கலந்து குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தழைகளை தூவி விட்டு பரிமாறினால் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கேரட் சாதம் தயார்.

Tags :
carrotCarrot ricehealthyகேரட்
Advertisement
Next Article