அடி தூள்.! திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு.. எப்படி செய்யலாம்.?
மீன் குழம்பு என்பது தென்னிந்தியாவில் பலருக்கும் பிடித்தமான உணவாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் ஆந்திராவில் காரசாரமாக செய்யக்கூடிய மீன் குழம்பின் செய்முறையை பார்க்கலாம் வாங்க.
சுவையான ஆந்திர மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:-
மீன்- 1/2 கிலோ, எண்ணெய் - 1/4 கப், கடுகு - சிறிதளவு, வெங்காயம் 1/2 கப், புளி - சிறிய உருண்டை, காஷ்மீர் மிளகாய் தூள் - தேவையான அளவு, பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி
அரைக்க தேவையான பொருட்கள்:
1/4 கப் வெங்காயம், 1/4 கப் தக்காளி, சீரகம், பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி, எண்ணெய் சிறிதளவு, கருப்பு மிளகு 3/4 கப் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்
முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை சேர்த்து வெங்காயத்துடன் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் போன்றவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இந்த கலவையில் புளியை கரைத்து ஊற்றி அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பின் மீன் சேர்ந்து அடுப்பை குறைத்து வேக விட்டு இறக்கினால் சுவையான காரசாரமான ஆந்திரா மீன் குழம்பு ரெடி .