முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.279-க்கு ரீசார்ஜ் பண்ணுங்க..!! இத்தனை சலுகைகளா..? புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல் நிறுவனம்..!!

Airtel has launched a new prepaid plan aimed at customers looking for an affordable recharge option.
10:21 AM Jul 12, 2024 IST | Chella
Advertisement

மலிவு விலையில் ரீசார்ஜ் விருப்பத்தைத் தேடும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு ஏர்டெல் நிறுவனம் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.279 மதிப்பிலான புதிய பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.279 விலையில் ரீசார்ஜ் செய்தால், தினசரி ரூ.6.2 செலவில் 45 நாட்கள் வேலிடிட்டி பெறலாம். இத்திட்டத்திற்கு மலிவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், சிம் ஆக்டிவ் திட்டங்களில் இது அதிகப்படியான வேலிடிட்டியை கொண்டுள்ளது. இது தவிர, ரூ.279 விலையில் ரீசார்ஜ் செய்தால், 45 நாட்கள் வேலிடிட்டியுடன் 600 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது.

இந்த புதிய திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால், டேட்டா வவுச்சர்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இது, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள் மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்திட்டத்தில் கூடுதலாக 3 மாதங்களுக்கு அப்பல்லோ 24x7 சர்க்கிள் சப்ஸ்கிரிப்ஷன், இலவச ஹலோ டியூன்கள், வின்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் உள்ளிட்ட பிற நன்மைகளும் அடங்கும். இதுவரை 28 அல்லது 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி இருந்த நிலையில், தற்போது ஏர்டெல்லின் இந்த புதிய திட்டமானது 45 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

Read More : தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்வா..? அமைச்சர் சிவசங்கர் சொன்ன பரபரப்பு தகவல்..!!

Tags :
ஏர்டெல் நிறுவனம்புதிய ப்ரீபெய்டு திட்டம்ரீசார்ஜ்வாடிக்கையாளர்கள்
Advertisement
Next Article