முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறதா?? அப்போ உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்.. கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..

reason for yawning
05:26 AM Dec 30, 2024 IST | Saranya
Advertisement

பொதுவாகவே கொட்டாவி என்பது சோர்வுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ஆனால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் 11 வது வார குழந்தை, வயிற்றில் கொட்டாவி விடுவது குழந்தையின் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றது. நமது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும் போது தான் கொட்டாவி வருகிறது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் அது வெறும் கட்டுக்கதை தான். ஆம், உண்மை தான். இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அல்லது கார்பன் டை ஆக்சைடு குறைவதால் கொட்டாவி ஏற்படாது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

Advertisement

ஒருவர் தான் இருக்கும் சூழலில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாத போது, சலிப்பு ஏற்பட்டு தூக்கத்தை உருவாக்கும் அமைப்பைத் தூண்டுகிறது. இதனால் தான் கொட்டாவி ஏற்படுகிறது. மேலும், மூளை வெப்பமடையும் போது கொட்டாவி அதனை குளிர்விக்க உதவுகிறது. கொட்டாவி விடும்போது நாம் ஆழ்ந்த மூச்சை எடுக்கிறோம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, குளிர்ந்த காற்று வாய் மற்றும் சைனஸ் குழிகளுக்குள் செல்கிறது. இதனால் மூளையின் வெப்பநிலை சீராகிறது.

கொட்டாவி விடுவது இயல்பானது, ஆனால் அடிக்கடி கொட்டாவி வந்தால் நாம் அதை கவனிக்க வேண்டும். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக் போன்ற நோய்களின் அறிகுறி தான் அடிக்கடி கொட்டாவி வருவது என கூறுகின்றனர். மூளையின் தண்டில் புண்கள் ஏற்பட்டிருந்தாலும் அதிகமாக கொட்டாவி வருமாம். கல்லீரல் அழற்சி மற்றும் பாதிப்பு இருந்தாலும் அடிக்கடி கொட்டாவி வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளை பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் அழற்சி, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, கொட்டாவி பிரச்சனையையும் உண்டாக்குகிறது. 

Read more: உஷார்!!! கோதுமை மாவை இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது…

Tags :
blood circulationreasonstrokeyawn
Advertisement
Next Article