For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமுக்குவான் பேயா.! தூங்கும் போது யாரோ அமுக்குவது போல் உணர்வு ஏற்படுகிறதா.. உண்மை என்ன தெரியுமா.!?

07:17 AM Jan 17, 2024 IST | 1newsnationuser5
அமுக்குவான் பேயா   தூங்கும் போது யாரோ அமுக்குவது போல் உணர்வு ஏற்படுகிறதா   உண்மை என்ன தெரியுமா
Advertisement

நம்மில் பலருக்கும் தூங்கும் போது யாரோ நம் மேல் விழுந்து அமுக்குவது போல் தோன்றும். அந்த நேரத்தில் கை, கால்களை அசைக்க முடியாமல் எதுவும் பேச முடியாமல் போகும். இதற்கு காரணம் அமுக்குவான் பேய்தான் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இதற்கு ஆய்வாளர்கள் கூறிய உண்மையான காரணம் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்

Advertisement

தூங்கும் போது இப்படி நிகழ்வது 'தூக்க பக்கவாதம்' என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். நவீன காலகட்டத்தில் பலரும் இரவு நேரங்களில் ஆழ்ந்த தூக்கம் தூங்குவதில்லை. நம் மூளை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் நம் உடல் ஆழ்ந்த தூக்கத்தை அடையாத காரணத்தினாலேயே தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த தூக்க பக்கவாதம் ஏற்படும் போது மூளை ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதினாலேயே உடலில் கை மற்றும் கால்களை அசைக்க முடியாமல் வாய் பேச முடியாமல் செய்கிறது. இதனால் பதட்டம், பயம் போன்றவை ஏற்பட்டு இல்லாத ஒன்றை மனம் கற்பனை செய்ய தொடங்குகிறது. இதனை தான் பலரும் அமுக்குவான் பேய் என்று கூறி வருகின்றனர்.

மேலும் மன அழுத்தம், மன பதட்டதினாலும் இந்த நோய் ஏற்படுகிறது. போதுமான அளவு உடற்பயிற்சியும், முறையான உணவு பழக்க வழக்கங்களும், மட்டுமே இந்த தூக்க பக்கவாத நோய்க்கு தீர்வாக உள்ளது. ஆனால் இந்த நோய்க்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடிக்கடி இந்த  தொந்தரவுகள் அதிகரித்தால் மருத்துவரை சந்தித்து தூக்கத்திற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

Tags :
Advertisement