தினமும் இதை செய்தால் நிம்மதியாக தூங்கி காலையில் ஃபிரஷாக எழலாம்..!! நீங்களும் டிரை பண்ணிப் பாருங்க..!!
தூங்குவதற்கு முன்பு புத்தகம் வாசிப்பது என்பது பலருக்கும் ஒரு பொதுவான பழக்கமாக உள்ளது. இது மனதை ரிலாக்ஸ் செய்து உடலை தூக்கத்திற்கு தயார் செய்கிறது. எனினும் வாசிப்பதற்கு நல்ல ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுப்பதும் அவசியம். ஒரு சில புத்தகங்கள் மனதை அமைதிப்படுத்தும். மற்றவை உங்களை விழிக்க செய்யும். தூங்குவதற்கு முன்பு புத்தகம் வாசிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். அன்றாட கவலைகளில் இருந்து உங்களை விடுவித்து, வேறு ஒரு உலகிற்கு உங்களை அழைத்து செல்லும். இது உங்களுடைய இதய துடிப்பு விகிதத்தை குறைத்து, தசைகளில் உள்ள டென்ஷனை குறைத்து, நீங்கள் விரைவாக தூங்க வழிவகுக்கும்.
மேலும், நீங்கள் புத்தகம் வாசிக்கும் பொழுது உங்களுடைய மூளை அன்றாட நிகழ்வுகளில் இருந்து வெளியேறி, உங்கள் கண் முன்னே புத்தகத்தில் இருக்கக்கூடிய அந்த கதைக்குள் சென்றுவிடும். இந்த நிலை மாற்றம் உங்கள் மனதிற்கு ரிலாக்சேஷன் கொடுத்து உங்களை ஓய்வு நிலைக்குள் அழைத்துச் செல்லும். இருப்பினும், நீங்கள் என்ன மாதிரியான புத்தகத்தை வாசிக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். கற்பனை கதைகள் அடங்கிய புத்தகங்களை வாசிப்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
எனினும் ஆழமான கருப்பொருள் அல்லது சிக்கலான விஷயங்கள் அடங்கிய புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்து விடுங்கள். இது போன்ற புத்தகங்கள் உங்கள் மனதை ஆக்டிவாக வைக்கும். மேலும், உண்மை கதை அடங்கிய புத்தகங்களை வாசிப்பதும் சரியானதாக இருக்காது. படுக்கைக்கு முன்பு புத்தகம் வாசிப்பது உங்களுடைய தூக்கம் அட்டவணையில் பாசிட்டிவான விளைவை ஏற்படுத்தும். இது உங்களுக்கு ஒரு தூக்க நேர வழக்கத்தை உருவாக்கி, இது தூங்குவதற்கான நேரம் என்பதை உங்கள் உடலுக்கு சிக்னல் கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த வழக்கத்தை நீங்கள் பின்பற்றும் பொழுது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு உங்களுக்கு தானாக தூக்கம் வந்துவிடும்.
இருப்பினும், எலக்ட்ரானிக் சாதனங்களில் புத்தகம் வாசிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதிலிருந்து வெளிவரும் நீல ஒளி உங்களுடைய உடலின் இயற்கையான தூக்க சுழற்சியில் குறிக்கிடலாம். எனவே, அச்சிடப்பட்ட புத்தகங்களை வாசிப்பது நல்லது. மேலும், படுக்கையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை சௌகரியமானதாக மாற்றுவதற்கு நீங்கள் ஒரு நல்ல சூழலை அமைக்க வேண்டும். உங்களுடைய படுக்கையறை அமைதியாகவும் எந்த விதமான தொல்லைகளில் இருந்தும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு சாஃப்ட் லேம்ப் பயன்படுத்தலாம். வசதியான ஒரு நாற்காலி அல்லது முதுகுக்கு தலையணை ஆதரவு கொடுத்து படுக்கையிலேயே அமர்ந்திருக்கலாம். எது எப்படியோ, படிக்க முடிவெடுத்து விட்டால், சரியான புத்தகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.