பெற்றோர்களே கவனம்!!! குழந்தைகள் மாரடைப்பால் உயிரிழக்க இது தான் காரணம்...
மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியாமான வாழ்க்கை முறையில், ஜிம் சென்ற உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர் சமீப காலமாக பள்ளியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மைசூரு மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களால், பெற்றோர்கள் மத்தியில், பயமும், பதட்டமும் ஏற்படுகிறது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஒரு சில முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: குழந்தைகளின் உடலில் சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் சமநிலையில் இல்லை என்றால், அது அவர்களின் இதயத் துடிப்பில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். படிப்பு அல்லது பிற காரணங்களால், குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் போது அவர்களின் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஒரு சில குழந்தைகளுக்கு, பிறக்கும் போதே இதயப் பிரச்சனைகள் இருக்கும். அதனை நாம் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் இது போன்ற பிரச்சனை ஏற்படும்.
ஒரு சில குழந்தைகளுக்கு இதயத் தசைகள் தடிமனாக இருக்கும். ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி என்று அழைக்கப்படும் இந்த பிரச்சனை, இரத்த ஓட்டத்தை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்தும். இன்றைய சுழலில், தங்களின் குழந்தைகளை மாரடைப்பு வராமல் எப்படி பாதுகாப்பது என்ற கேள்வி பல பெற்றோர்களுக்கு இருக்கும். இதற்க்கு நீங்கள், உங்கள் குழந்தைகளின் இதய ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தைகளை விளையாட விடாமல், எப்போதும் ஒரே இடத்தில அமர்ந்து படிக்க சொல்ல வேண்டாம். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும்.
- அதே சமயம், அவர்களால் எந்த அளவிற்கு செய்ய முடியும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அளவிற்கு மீறும் போது அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைத சரிவிகித உணவைக் கொடுப்பது அவசியம். முடிந்த வரை நொறுக்குத் தீனி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தை அடிக்கடி சோர்வடைந்தால், மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், உடனடியாக தாமதம் இல்லாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
Read more: குளிர்காலத்தில், கீரையை அதிகம் சாப்பிட வேண்டாம்.. மீறினால் பெரும் ஆபத்து!!